வனேசா டிரம்பைக் காதலிக்கும் டைகர் வுட்ஸ்!

காற்றில் உள்ளது காதல், என் அருகில் நீ இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வனேசா டிரம்பைக் காதலிக்கும் டைகர் வுட்ஸ்!
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் மருமகள் வனேசா டிரம்புடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளார் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியர், தன் தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2005-ல் வனேசா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2018-ல் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தனர்.

இந்நிலையில், அண்மையில் கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் கோல்ஃப் போட்டி ஒன்றை நடத்தினார் டைகர் வுட்ஸ். இதில் வுட்ஸ் உடனிருந்தார் வனேசா டிரம்ப். இதைத் தொடர்ந்து வனேசாவுடனான காதலை உறுதிப்படுத்தும் விதமாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் டைகர் வுட்ஸ்.

வனேசாவுடனான தன் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள வுட்ஸ், `காற்றில் உள்ளது காதல், என் அருகில் நீ இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்! வாழ்க்கைப் பயணத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக எதிர்நோக்குகிறோம். இந்த நேரத்தில், எங்கள் மனதிற்கு நெருக்கமான அனைவரிடமும் இருந்து தனிமையைக் கோருகிறோம்’ என்றார்.

எலின் நார்டெக்ரேன் உடனான திருமணத்தின் மூலம் டைகர் வுட்ஸுக்கு சாம் மற்றும் சார்லி என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தை மீறிய உறவில் வுட்ஸ் இருந்த செய்தி வெளியானதை அடுத்து, கடந்த 2010-ல் அவரை விவாகரத்து செய்தார் எலின்.

வுட்ஸின் இரு மகன்களுடன், பெஞ்சமின் பள்ளியில் பயின்று வருகிறார் வனேசாவின் மூத்த மகள் கேய் டிரம்ப். குறிப்பாக, கடந்த வாரம் நடைபெற்ற ஜூனியர் கோல்ஃப் போட்டியில் சார்லி வுட்ஸும், கேய் டிரம்பும் பங்கேற்றிருந்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in