எலான் மஸ்கின் புதிய சம்பளம் ரூ. 88.69 லட்சம் கோடி: டெல்ஸா பங்குதாரர்கள் ஒப்புதல் | Elon Musk |

அடுத்த 10 ஆண்டுகள் இந்தச் சம்பளம் வழங்கப்படும் ஆனால் அதற்கு 12 நிபந்தனைகளை மஸ்க் நிறைவு செய்ய வேண்டும்...
எலான் மஸ்க் (கோப்புப்படம்)
எலான் மஸ்க் (கோப்புப்படம்)
1 min read

எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் நெ.1 பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ், நியூரோலிங் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு ஆண்டுதோறும் கணிசமான வருமானம் டெஸ்லாவிலிருந்துதான் கிடைக்கிறது.

இதையடுத்து, தற்போது பல்வேறு இடங்களில் இருந்து டெஸ்லாவுக்கு நெருக்கடி வரும் சூழலில் இந்நிறுவனத்தின் பங்குகளை உயர்த்த தனக்கு ஒரு ட்ரில்லியன் சம்பளம் வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தி வந்தார். இதற்கு அதன் பங்குதாரர்கள் பலர் ஆதரித்து வந்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், எலான் மஸ்கின் புதிய சம்பளம் குறித்து முடிவெடுக்க ஆஸ்டின் நகரத்திலுள்ள டெஸ்லா தொழிற்சாலையில் வருடாந்திரக் கூட்டம் நடந்தது. அதில், எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75%-க்கும் அதிகமானோர் ஒப்புதல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் எலான் மஸ்கின் புதிய சம்பளம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 88.69 லட்சம் கோடி.

ஆனால் இந்தத் தொகை எலான் மஸ்கிற்குப் பணமாக வழங்கப்படாது. அடுத்த 10 ஆண்டுகளில் 12 தவணைகளில் நிறுவனத்தின் பங்குகளாக அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலர்கள் அளவை 8.5 டிரில்லியன் டாலர்கள் ஆக உயர்த்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி மின்சார வாகனங்கள், 10 லட்சம் ரோபோ டாக்ஸிகள் ஆகியவற்றைச் சந்தைக்குக் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட 12 நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தச் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பலரும் எலான் மஸ்கிற்குப் பாராட்டு தெரிவித்து வருகிறன்றனர். டெல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் டெல் “எலான் மஸ்கின் புதிய சம்பள உயர்வு குறித்த 75% பங்குதாரர்களின் தீர்க்கமான முடிவு. எலான் மஸ்கிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் நன்றி தெரிவித்துள்ளார்.

Summary

Tesla shareholders approved an epic $1 trillion pay package for Elon Musk. The deal was earlier proposed by Tesla’s board of directors. Over 75% of Tesla shareholders voted in favour of the pay package, the company said in its annual meeting.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in