மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்: ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும், பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்கும் வகையில் சர்வதேச சமூகம் ஈடுபட வேண்டும்.
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்: ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ANI
1 min read

கடந்த அக்.1-ல் ஈரானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிதீர்க்கும் விதமாக, இன்று (அக்.26) காலை ஈரான் மீது வான்வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது இஸ்ரேல் பாதுகாப்புப் படை.

லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் காஸாவின் ஹமாஸ் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரமாக மேற்கொண்டிருந்தபோது, கடந்த அக்.1-ல் 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியது ஈரான்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (அக்.26) காலை ஈரான் மீது வான்வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது இஸ்ரேல். இந்த தாக்குதலில் ஈரானில் உள்ள ஏவுகணை தயாரிப்பு மையங்களும், ராணுவ தளவாட மையங்களும் குறித்து தாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். அதே நேரம் ஈரானின் எண்ணெய் கிணறுகளும், அணுமின் தயாரிப்பு நிலையங்கள் தாக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால், கடுமையான பின்விளைவை சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல். மேலும், இந்த தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தியபோது, அது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும், இந்தத் தாக்குதலால் சில இடங்களில் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேதாரம் விளைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது ஈரான்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சௌதி அரேபியா, இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும், பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்கும் வகையில் சர்வதேச சமூகம் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in