பெண் கல்விக்கான தடையை நீக்குங்கள்: தாலிபான்களுக்கு மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்

பெண்கள் கல்விக்கான தடையைத் தொடர இனியும் சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுங்கள் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
பெண் கல்விக்கான தடையை நீக்குங்கள்: தாலிபான்களுக்கு மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் அனைத்து பெண்கள் பள்ளிகளையும் உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தாலிபான் நிர்வாகத்தை மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.

பெண்கள் கல்விக்கான தடையைத் தொடர இனியும் சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுங்கள் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கு மூடப்பட்டன. மூன்று ஆண்டுகள் ஆகியும் தாலிபான் நிர்வாகத்தினர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருக்கின்றனர்.

சிறுமிகளின் கல்வியை மறுப்பது பெண்களை தனிமைப்படுத்துவது, உரிமைகளைக் கட்டுப்படுத்துவதை தாலிபான்கள் ஒரு கொள்கையாகவே செயல்படுத்தி வருவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். தாலிபான்கள் நிறவெறியை திணிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்வி மறுக்கப்படுவது தனிநபர் வாய்ப்புகளை நசுக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே தலிபான் நிர்வாகத்தினர் கொள்கைகளை மாற்றியமைத்து பெண் கல்விக்கான வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in