பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பு தேவை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

சார்க் கூட்டமைப்புக்கு மாற்றாக பிம்ஸ்டெக் கூட்டமைப்பு பார்க்கப்படுகிறது.
பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பு தேவை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ANI

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 11) தொடங்கியது.

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெகில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் உரையாற்றினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், `பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பில் புதிய வளங்கள், ஆற்றல்கள் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றை செலுத்துவதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கிறோம் என்ற செய்தியில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டிற்கு வலுவான விளைவுகளைத் தயாரிப்பதற்கு இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்தது’ என்றார்.

பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்களின் முதல் மாநாடு கடந்த வருடம் தாய்லாந்து நாட்டில் நடந்தது. இந்த வருடம் தாய்லாந்து நாட்டில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நடைபெற உள்ள வேளையில், டெல்லியில் நடக்கும் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

பிம்ஸ்டெக் போல இந்தியாவை மையமாக வைத்து செயல்படும் தெற்காசியாவில் செயல்படும் மற்றொரு கூட்டமைப்பு சார்க். சார்க் கூட்டமைப்பில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் சார்க் கூட்டமைப்பு நாடுகளிடம் தகுந்த ஒத்துழைப்பு இல்லாத்தால் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சார்க் கூட்டமைப்புக்கு மாற்றாக பிம்ஸ்டெக் கூட்டமைப்பு பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in