பிரதமர் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகை | PM Modi | Vladimir Putin |

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பின் முதன்முறையாக இந்தியா வரும் புடின்...
விளாடிமிர் புடின் உடன் பிரதமர் மோடி (கோப்புப்படம்)
விளாடிமிர் புடின் உடன் பிரதமர் மோடி (கோப்புப்படம்)ANI
1 min read

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், டிசம்பர் 4, 5 ஆகிய நாள்களில் இந்தியா வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று பல நாடுகளை எச்சரித்தது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்க இறக்குமதி வரியையும் உயர்த்தியது. ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடனான நட்புறவைப் பாராட்டி வருகிறது.

இதற்கிடையில், இந்தியா - ரஷ்யா இடையிலான 23-வது வருடாந்திர உச்சி மாநாடு டிசம்பர் 4,5 ஆகிய நாள்களில் தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அரசு முறைப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும், வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்து பரஸ்பரம் கருத்துகளை பரிமாறி கொள்ளவும் வாய்ப்பை வழங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற முறை உக்ரைன் உடனான போர் தொடங்குவதற்கு முன் 2021-ல் புடின் இந்தியா வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா வருகை தரவுள்ளார். அப்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

At the invitation of Prime Minister Narendra Modi, President of the Russian Federation Vladimir Putin will pay a State visit to India from 04 - 05 December 2025 for the 23rd India-Russia Annual Summit.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in