யூடியூபையே மிஞ்சிய ரொனால்டோ!

சேனல் ஆரம்பித்த முதல் நாளிலேயே கோல்டன் பட்டனை பெற்றார் ரொனால்டோ.
ரொனால்டோ
ரொனால்டோ
1 min read

யூடியூப் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலை விட அதிக ஆதரவாளர்களைப் பெற்றுள்ளார் ரொனால்டோ.

39 வயதான ரொனால்டோ “யுஆர் கிறிஸ்டியானோ” என்கிற புதிய யூடியூப் சேனலை ஆகஸ்ட் 21 அன்று தொடங்கினார்.

இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “நான் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளேன். அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்” என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து சேனல் ஆரம்பித்த ஒரே நாளில் 1.5 கோடி ஆதரவாளர்களை பெற்று உலக சாதனை படைத்தார் ரொனால்டோ.

முன்னதாக, வேகமாக 10 லட்சம் ஆதரவாளர்களை பெற்றவர் என்ற சாதனையையும் படைத்த ரொனால்டோ, 10 லட்சம் ஆதரவாளர்களை பெற்றதற்காக கொடுக்கப்படும் கோல்டன் பட்டனையும் சேனல் ஆரம்பித்த முதல் நாளிலேயே பெற்றார்.

இந்நிலையில் தற்போது யூடியூப் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலை விட அதிக ஆதரவாளர்களைப் பெற்றுள்ளார் ரொனால்டோ.

யூடியூப் நிறுவனத்தின் யூடியூப் சேனலுக்கு 41.4 மில்லியன் ஆதரவாளர்கள் உள்ளனர். அதுவே ரொனால்டோவின் “யுஆர் கிறிஸ்டியானோ” யூடியூப் சேனலுக்கு தற்போது 52 மில்லியன் ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே யூடியூபில் யூடியூபையே மிஞ்சியுள்ளார் ரொனால்டோ.

ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீகில் அல் நசர் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.

logo
Kizhakku News
kizhakkunews.in