பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்: பலுச் கிளர்ச்சியாளர்கள் 51 இடங்களில் தாக்குதல்!

பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் அமைதி, போர் நிறுத்தம், சகோதரத்துவம் குறித்த ஒவ்வொரு பேச்சும் வெறும் ஏமாற்று வேலை, போர் தந்திரம், தற்காலிகப் பேச்சு.
பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்: பலுச் கிளர்ச்சியாளர்கள் 51 இடங்களில் தாக்குதல்!
ANI
1 min read

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள 51-க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை நிலைகளைக் குறிவைத்து, ஒருங்கிணைந்த முறையில் 71 தாக்குதல்கள் நடத்தியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) (கிளர்ச்சியாளர் குழு) கூறியுள்ளது.

தெற்காசியாவில் `ஒரு புதிய ஒழுங்குமுறை தவிர்க்கமுடியாது ஆகிவிட்டது’ என்று தலைப்பிட்டு பலுச் விடுதலை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டின் பிரதிநிதி என்று தங்கள் அமைப்பு அழைக்கப்படுவதை கண்டித்துள்ள பி.எல்.ஏ., பலுசிஸ்தான் பிராந்தியத்தின் `துடிப்பான மற்றும் தீர்க்கமான கட்சி’ என்று தங்கள் குழுவை அடையாளப்படுத்தியுள்ளது.

`பி.எல்.ஏ. என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணம் அல்லது அதிகாரத்திற்கான பிரதிநிதி என்ற கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். பி.எல்.ஏ. பகடைக்காயாகவோ, அமைதியான பார்வையாளராகவோ இல்லை. இந்த பிராந்தியத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவ, அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் எங்களுக்கான முக்கிய இடம் உள்ளது, எங்களது பங்கை நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம்’ என்று பி.எல்.ஏ.வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், `பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் அமைதி, போர் நிறுத்தம், சகோதரத்துவம் குறித்த ஒவ்வொரு பேச்சும் வெறும் ஏமாற்று வேலை, போர் தந்திரம், தற்காலிக பேச்சு" என்று இந்தியாவுக்கான செய்தியாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், தங்கள் நோக்கத்திற்காக உதவுமாறு இந்தியா உள்பட பிற நாடுகளிடம் பி.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளது.

இன்று (மே 12) வெளியிடப்பட்டுள்ள மற்றுமொரு அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள், வாகன அணிவகுப்புகள் போன்றவற்றைக் குறிவைத்து மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பி.எல்.ஏ.வின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் ஜீயந்த் பலுச் தெரிவித்துள்ளார்.

`இந்த வார தொடக்கத்தில் இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் உச்சத்தில் இருந்தபோது, ​​ஆக்கிரமிக்கப்பட்ட பலுசிஸ்தானின் 51-க்கும் மேற்பட்ட இடங்களில், பி.எல்.ஏ. 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in