5-வது முறை ரஷ்ய அதிபராக பதவியேற்றார் விளாடிமிர் புடின்

தொடர்ச்சியாக 3-வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடின்ANI

ரஷ்யாவின் புதிய அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றுள்ளார்.

ரஷியாவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ரஷியாவின் அதிபராக 5-வது முறை புடின் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த தேர்தலில் 88 சதவீத ஓட்டுகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றிப்பெற்றார். தொடர்ச்சியாக 3-வது முறையாக அதிபர் தேர்தலில் புடின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

1999 முதல் செயல் அதிபராக பதவியேற்ற புடின், 2000-ம் ஆண்டு மே 7 அன்று முதல் முறையாக அதிபராக பொறுப்பேற்றார். 2008 வரை பதவியில் இருந்த இவர், இதன் பிறகு 2012 மே மாதம் முதல் தற்போது வரை அதிபராக நீடிக்கிறார்.

இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் இன்னும் 6 ஆண்டுகள் அவர் அதிபராக நீடிப்பார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in