UN Special Rapporteur expresses concerns over Pakistani airstrikes in Afghanistan; urges de-escalation
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி | Pakistan | Afghanistan |

ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்று பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது...
Published on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழி தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் போக்கு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதில் சமீப காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதமும் தொடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளும் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறன.

மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்

இதற்கிடையில், நேற்று (மார்ச் 16) இரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆப்கன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் கூறியபோது, “2000 படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வு சிகிச்சை மருத்துவமனை மீது இரவு 9 மணி அளவில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 250-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களுகுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

ஆப்கானிஸ்தான் கண்டனம்

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஜுல்லா முஜாஹித், “பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஆப்கானிஸ்தான் வான் எல்லையை மீறி, காபூலில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

பாகிஸ்தான் மறுப்பு

ஆனால், ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்று பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அததுல்லா தரார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காபூலில் உள்ள ராணுவ தளவாடங்களை மட்டுமே பாகிஸ்தான் வான்படை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கில் நங்கர்ஹர் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்நாட்டின் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஆயுதக் கிடங்கு அழிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பயங்கரவாத செயல்களுக்கு உதவியாக இருந்த பகுதிகளின் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் இதில் கொல்லப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Summary

At least 400 people have been killed and around 250 injured in a Pakistani airstrike at a hospital in Afghanistan's capital, Kabul, a Taliban spokesperson said early Tuesday.

logo
Kizhakku News
kizhakkunews.in