

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவின் அலுவலகம் மீது ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சனிக்கிழமை முதல் ஈரானின் பல இடங்களைத் தாக்கி வருகின்றன. ஈரானின் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் படுகொலையுடன் தொடங்கிய இந்தப் போரில் ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் இதுவரை குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் ரெட் கிரசென்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்
இஸ்ரேல் மீது மட்டுமன்றி, ஈரான் தனது உச்ச தலைவரின் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. துபாய், பஹ்ரைன், ஓமான் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. அதேபோல் அபுதாபி, தோஹா போன்ற வளைகுடா நகரங்களுக்கு மேல் வெடிச்சத்தங்கள் கேட்டன. இந்தத் தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த உச்சக்கட்டப் பதற்றம் உலகப் பொருளாதாரத்தையும், சர்வதேச அமைதியையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் ஏவுகணைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், "சியோனிஸ ஆட்சியின் குற்றவாளி பிரதமரின் அலுவலகமும், அவர்களின் விமானப்படை தளபதியின் தலைமையகமும் தாக்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கெய்பர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், ஜெருசலேம் பகுதியிலும் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதையடுத்து, இஸ்ரேலின் ராணுவம் ஈரானின் ஏவுகணைகளைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
நெதன்யாஹூ நிலை என்ன?
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் நிலை என்ன என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. அவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா அல்லது தாக்குதலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
The Islamic Revolutionary Guards Corps - which reported to Ayatollah Ali Khamenei, Iran's supreme leader who was killed in the US-Israeli attacks on Saturday - said today it targeted Israel premier Benjamin Netanyahu's office in Tel Aviv as well as security and military centres in Haifa and an attack on east Jerusalem.