தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான ஒத்துழைப்பு தேவை: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் மோடி!

ஐநா சபையில் நிலுவையில் உள்ள சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான விரிவான கொள்கையை முன்வைத்து நாம் கூட்டாக செயல்பட வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான ஒத்துழைப்பு தேவை: பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் மோடி!
ANI
1 min read

தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான ஒத்துழைப்பு தேவை, இந்த விவகாரத்தில் இரட்டை நிலைபாடு கூடாது என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்  பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

9 நாடுகள் பங்கேற்றுள்ள பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கஸன் நகரில் நேற்று (அக்.22) தொடங்கியது. இதில் பிரிக்ஸ் தலைவர்களுடனான வட்ட மேசையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசியவை பின்வருமாறு:

`தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு ஆதரவான நிதியளிப்புக்கு எதிராக ஒற்றுமையுடனும், உறுதியுடனும் நாம் செயல்படவேண்டும். இத்தகைய தீவிரமான விவகாரங்களில் இரட்டை நிலைபாடு கூடாது. நமது நாட்டு இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் செல்வதை தடுக்கும் வகையில் நாம் சுறுசுறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஐநா சபையில் நிலுவையில் உள்ள சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான விரிவான கொள்கையை முன்வைத்து நாம் கூட்டாக செயல்பட வேண்டும். பணவீக்கத்தைத் தடுப்பது, உணவு, தண்ணீர், எரிசக்தி மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றுக்கு உலக நாடுகள் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச வளர்ச்சி வங்கிகள், உலக வர்த்தக நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதை நோக்கி நாம் உடனடியாக முன்னேற வேண்டும். சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு பதிலாக, அவற்றை நாம் மாற்ற விரும்புகிறோம் என்ற பிம்பம் உருவாகிவிடக்கூடாது.

இந்த தொழில்நுட்ப யுகத்தில், இணைய பாதுகாப்பு, டீப் ஃபேக், போலித் தகவல்கள் ஆகியவை புதிய சவால்களாக உருவாகியுள்ளன. இந்த சூழலில் பிரிக்ஸ் அமைப்பிடம் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in