இடைக்கால அரசை வழிநடத்துகிறார் முகமது யூனுஸ்: வங்கதேச அதிபர் மாளிகை

பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் கிராமீன் வங்கியை நிறுவி வங்கதேச ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்குக் கடன் வழங்கினார்
இடைக்கால அரசை வழிநடத்துகிறார் முகமது யூனுஸ்: வங்கதேச அதிபர் மாளிகை
PRINT-125
1 min read

நோபல் பரிசை வென்ற முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டாக்கா டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. வங்கதேச அதிபரின் செய்தித்தொடர்பு செயலாளர் ஜோய்னல் ஆபிதீன் இதை உறுதிபடுத்தியுள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதினுக்கும், மாணவர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவுக்குப் பிறகு அமைந்துள்ள வங்கதேசத்தின் இடைக்கால அரசை வழிநடத்த உள்ளார் முகமது யூனுஸ்.

அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசித்துவிட்டு, இடைக்கால அரசில் இடம்பெறுபவர்கள் குறித்து இறுதி செய்யப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார் அதிபரின் செய்தித்தொடர்பு செயலாளர் ஜோய்னல் ஆபிதீன்.

வங்கதேசத்தில் நிலவி வரும் சூழல் குறித்தும், இடைக்கால அரசு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள நேற்று (ஆகஸ்ட் 6) மாலை 6 மணி அளவில், மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த 13 ஒருங்கிணைப்பாளர், வங்கதேச அதிபர் அலுவலகமான பங்காபபனுக்குச் சென்றனர். இந்த ஆலோசனையில் வங்கதேசத்தின் முப்படைத்தளபதிகளும் கலந்து கொண்டார்கள்.

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் உச்சத்தை எட்டியுள்ள மக்கள் போரட்டத்தில் இதுவரை 440 பேர் வரை இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நேற்று வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார் வங்கதேச அதிபர் ஷஹாபுதின். தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படும் வரை இடைக்கால அரசு செயல்படும் என்று கூறப்படுகிறது.

பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் கிராமீன் வங்கியை நிறுவி வங்கதேச ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்குக் கடன் வழங்கினார். இதன் மூலம் லட்சக்கணக்கான வங்கதேச மக்களை வறுமையிலிருந்து மீண்டனர். இதற்காக முகமது யூனுஸுக்கு 2006-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in