உலகளவில் 30 கோடி ஆதரவாளர்களை பெற்ற முதல் யூடியூபர் என்ற சாதனையை ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் படைத்துள்ளார்.
பல்வேறு சாகசங்களைச் செய்து அதனை யூடியூபில் பதிவிட்டு புகழ் பெற்றவர் ஜிம்மி டொனால்ட்சன். இவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற சேனைலை நடத்தி வருகிறார்.
2012 முதல் சுமார் 800 காணொளிகளை மட்டுமே பதிவிட்ட இவர் யூடியூபில் 30 கோடி ஆதரவாளர்களைப் பெற்ற முதல் யூடியூபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவரது சேனலில் பதிவிடப்பட்ட ஒவ்வொரு காணொளியும் பல கோடி பார்வைகளை பெற்று அசத்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு காணொளி 63.2 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.
அதிக ஆதரவாளர்களைப் பெற்றிருந்தவர்கள் பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த டி-சீரிஸ் நிறுவனத்தை (26.9 கோடி ஆதரவாளர்கள்) கடந்த மாதம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது மிஸ்டர் பீஸ்ட் சேனல்.