திபெத் – நேபாளம் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம்: 120-க்கும் மேற்பட்டோர் பலி!

நிலநடுக்கத்தின் தாக்கம் பீஹார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உணரப்பட்டது.
திபெத் – நேபாளம் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம்: 120-க்கும் மேற்பட்டோர் பலி!
1 min read

திபெத் – நேபாளம் எல்லைப்பகுதியில் இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

`இன்று காலை (திபெத் நேரப்படி) 9.05 மணிக்குத் திபெத்தின் ஸிஸாங் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த டிங்ரி கவுண்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், 126 பேர் உயிரிழந்துள்ளனர்’ எனப் பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

திபெத் – நேபாளம் எல்லைப்பகுதியில் இந்திய நேரப்படி காலை 6.35 மணி அளவில் ஒரு நிலநடுக்கம் பதிவானதாகவும், அதனைத் தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் பதிவானதாகவும் இந்திய அரசின் `நில அதிர்வுக்கான தேசிய மையம்’ (National Centre for Seismology) தகவல் தெரிவித்துள்ளது.

காலை 7.02 மணிக்கு 10 கி.மீ. ஆழத்தில் 2-வது நிலநடுக்கமும் (ரிக்டர் 4.7), இதைத் தொடர்ந்து 7.07 மணிக்கு 30 கி.மீ. ஆழத்தில் 3-வது நிலநடுக்கமும் (ரிக்டர் 4.9) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் பீஹார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உணரப்பட்டது. ஆனால் இந்தியாவில் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தியா மற்றும் யுரேசிய நிலத்தட்டுகள் ஒன்றிணையும் இமய மலைத்தொடர் பகுதியில் நேபாளம் அமைந்துள்ளது. கடந்த 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த (ரிக்டர் 7.8) நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 9,000 மக்கள் உயிரிழந்தனர், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in