மெக்ஸிகோ: பிரசார மேடை சரிந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு!

50-க்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மெக்ஸிகோவில் பிரசார நிகழ்வில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் வரும் ஜூன் 2 அன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் பலத்த காற்று வீசியுள்ளது.

இந்நிலையில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் வாக்கு சேகரிப்பதற்காக பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in