92 வயதில் 5-வது திருமணத்துக்குத் தயாராகும் ஊடக ஜாம்பவான் ரூபர்ட் முர்டோக்

ஜூன் 1 அன்று தனது கலிபோர்னியா பண்ணைத் தோட்டத்தில் நடைபெறும் விழாவில் ஜுகோவாவை முர்டோக் திருமணம் செய்யவுள்ளார்
மீடியா மொகுல் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் எலினா ஜுகோவாவுடன் நிச்சயதார்த்தம்
மீடியா மொகுல் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் எலினா ஜுகோவாவுடன் நிச்சயதார்த்தம்

ஊடக உலகின் ஜாம்பவானான 92 வயது ரூபர்ட் முர்டோக், தனது 5-வது திருமணத்துக்குத் தயாராகி விட்டார்.

ரூபர்ட் முர்டோக்குக்கும், ஓய்வு பெற்ற உயிரியலாளரான 62 வயது எலேனா ஜுகோவாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது மூன்றாவது மனைவி வெண்டி டெங் மூலமாக ஜுகோவாவை சந்தித்தார் முர்டோக். இந்த உறவு தற்போது திருமணம் வரைக்கும் சென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்கரான முர்டோக், தனது நியூஸ் கார்ப் நிறுவனம் மூலமாக நூற்றுக்கணக்கான உள்ளூர், தேசிய, உலக அளவிலான ஊடகங்களை நிறுவினார். புகழ்பெற்ற ஊடகங்களான தி சன், தி டைம்ஸ், தி டெய்லி டெலிகிராஃப், ஹெரால்ட் சன், தி ஆஸ்திரேலியன், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூ யார்க் போஸ்ட் போன்றவற்றின் உரிமையாளர் இவர் தான். உலகின் பெரிய பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

ஜூன் 1 அன்று தனது கலிபோர்னியா பண்ணைத் தோட்டத்தில் நடைபெறும் விழாவில் ஜுகோவாவை முர்டோக் திருமணம் செய்யவுள்ளார் என்று தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற பல் மருத்துவர் ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக 2023-ல் அறிவித்தார் முர்டோக். எனினும் சில வாரங்களில் அவரைப் பிரிந்தார். இந்நிலையில் ஜுகோவாவைத் திருமணம் செய்யவுள்ளார். மாஸ்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ள ஜுகோவா, தொழிலதிபரும் பில்லியனருமான அலெக்சாண்டர் இதற்கு முன்பு திருமணம் செய்தார்.

1956-ல் பாட்ரிசியா புக்கரை மணந்தார் முர்டோ. ஆனால் அவர்கள் பதினோரு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 1967-ல் அன்னா மரியா டோர்வை 1967-ல் மணந்தார். இத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். திருமணமாகி 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 1999-ல் தனது 2-வது மனைவியைப் பிரிந்தார் முர்டோக். மூன்றாவது மனைவியான வெண்டி டெங்-கை 1999-ல் திருமணம் செய்து கொண்டார். 2013-ல் இருவரும் விவாகரத்து பெற்றார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். 2016 முதல் 2022 வரை ஜெர்ரி ஹாலைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார் முர்டோக்.

கடந்த ஆண்டு, முர்டோக் தன்னுடைய சாம்ராஜ்யமான Fox Corp மற்றும் News Corp ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கௌரவத் தலைவர் பதவிக்கு மாறுவதாகவும் தெரிவித்தார். அவரது மகன் லாச்லன் முர்டோக் இரண்டு நிறுவனங்களிலும் உயர் பதவியைப் பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in