குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்: டோக்கியோவில் ஜெய்சங்கர்

இன்று காலை டோக்கியோவின் ஃபிரீடம் பிளாசா பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தார் ஜெய்சங்கர்
குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்: டோக்கியோவில் ஜெய்சங்கர்
1 min read

குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க டோக்கியோவுக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கெனைச் சந்தித்து உரையாடினார்.

குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இதுவரை இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று (ஜூலை 28) கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கெனைச் சந்தித்து உரையாடினார் ஜெய்சங்கர். இந்த சந்திப்பில், பிராந்திய அளவிலும், உலக அளவிலும் பல தரப்பட்ட விசயங்கள் குறித்து பிளிங்கெனுடன் உரையாடியதாகத் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் ஜெய்சங்கர்.

இன்று காலை டோக்கியோவின் ஃபிரீடம் பிளாசா பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தார் ஜெய்சங்கர். இந்த நிகழ்வில் காந்திக்கு மிகவும் பிடித்த பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பள்ளிக்குழந்தைகள் பாடினார்கள். ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ், டோக்கியோ நகர மேயர் டக்கேஷி சைடோ ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

குவாட் அமைப்பானது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 2017-ல் தொடங்கப்பட்ட இந்த குவாட் அமைப்பு திறந்த, நிலையான மற்றும் வளமான பகுதியாக இந்திய-பசிஃபிக் பகுதியை தக்க வைப்பதைத் தன் பிரதானமான நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in