காஸா நகரில் 30 ஹமாஸ் பயங்கரவாதிகளைக் கொன்ற இஸ்ரேல்

30 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படைகள்
30 ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படைகள்ANI
1 min read

காஸா நகரில் நேற்று ஒரு நாளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை திங்கள்கிழமை காலை தெரிவித்துள்ளது.

கான் யூனிஸில் உள்ள ஹமாஸின் சுரங்கங்கள்மீது இஸ்ரேல் துருப்புக்கள் தாக்குதலை நடத்தி கையெறிக் குண்டுகள், வெடிமருந்துகள், ராணுவ உபகரணங்கள், ஆயுத பாகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தன. கான் யூனிஸின் பிற பகுதிகளில், பல ஹமாஸ் பயங்கரவாதிகள் மோதலில் கொல்லப்பட்டனர். மத்திய காஸாவில் மேலும் பத்து ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய படைகள் கொன்றன.

அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகே இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 240 இஸ்ரேலியர்களும் வெளிநாட்டினரும் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 134 பிணைக் கைதிகளில் 31 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in