

ஈரானின் நேடன்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதல், 22 நாள்களாக நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி, ராணுவ உயர் தலைவர் அலி லரிஜானி உள்ளிட்ட முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது மட்டுமன்றி தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளின் மீதும் ஈரான் ஏவுகணை, டிரோன்கள் உள்ளிட்டவற்றை ஏவி தாக்கி வருகிறது. மறுபுறம் ஈரானை இஸ்ரேல் - அமெரிக்கப் படைகளும் தாக்கி வருகின்றன.
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல்
இதற்கிடையில், நேடன்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச அணு ஆற்றல் முகமை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில்,
“நேடன்ஸ் அணுசக்தி தளம் இன்று தாக்கப்பட்டதாக ஈரான், சர்வதேச அணுசக்தி முகமைக்கு தகவல் தெரிவித்துள்ளது. தளத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவுகளில் அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை. இந்த அறிக்கை குறித்து சர்வதேச அணுசக்தி முகமைக்கு விசாரித்து வருகிறது. அணு விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, ராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச அணுசக்தி முகமைக்கு தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ரோசி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேடன்ஸ் அணுசக்தி நிலையம், ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி மையங்களில் ஒன்று. ரானின் அணு திட்டம் குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்திருந்த இடமாக இது முன்பு இருந்துள்ளது. இதனால் ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Iran informs about Natanz nuclear site attack, no increase in radiation levels: UN atomic watchdog IAEA