இது போருக்கான நேரமல்ல: ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பேச்சு

"ஆஸ்திரியாவுக்கான என்னுடையப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது."
இது போருக்கான நேரமல்ல: ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி பேச்சு
ANI

ஆஸ்திரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது போருக்கான நேரமல்ல என தெரிவித்துள்ளார்.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு இரு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு ஆஸ்திரியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்குப் பயணம் முதல் இந்தியப் பிரதமர் என்கிற பெயரைப் பெற்றுள்ளார் மோடி.

ஆஸ்திரியாவில் அந்த நாட்டு சான்சலர் நெஹமரைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

பிரதமர் மோடி பேசுகையில், "நெஹமருடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தோம். உக்ரைன், மேற்கு ஆசிய நாடு உள்பட, உலகளவில் நடைபெற்று வரும் போர்ச் சூழல் குறித்து இருவரும் விரிவாகப் பேசினோம். நான் முன்பே கூறியதுதான், இது போருக்கான நேரமல்ல. ஆஸ்திரியாவுக்கான என்னுடையப் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in