மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு (விடியோ)

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் மலேசிய கடற்படை அறிவித்துள்ளது.
மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு (விடியோ)
Screen Grab (https://twitter.com/ArthurM40330824)

மலேசியாவில் இரு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மலேசிய கடற்படை தினத்தின் 90-வது ஆண்டு விழாவுக்காக கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் இன்று ஒத்திகை செய்து வந்தார்கள். பெரக் என்ற பகுதியில் ஒத்திகை செய்துகொண்டிருந்தபோது, இரு ஹெலிகாப்டப்கள் லுமத் கடற்படைத் தளத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இரு ஹெலிகாப்டர்களிலும் இருந்த 10 பேரும் உயிரிழந்ததாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் மலேசிய கடற்படை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in