ஐந்து வருடங்களில் முதல்முறை: சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்!

கடந்த ஜூன் 2020-ல் லடாக் யூனியன் பிரதேசத்தின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினருக்கு இடையே மோதல் நடைபெற்றது.
ஐந்து வருடங்களில் முதல்முறை: சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்!
1 min read

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ல் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான அரசு ரீதியிலான உறவுகளில் தொய்வு ஏற்பட்டது.

இதை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சீனப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (ஜூலை 15) சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டிற்காக சீனாவிற்கு சென்றுள்ள ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சீன அதிபரிடம் விளக்கியதாக தகவல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் ஜெய்சங்கர் கூறியதாவது,

`இன்று காலை பெய்ஜிங்கில் அதிபர் ஷி ஜின்பிங்கை சக வெளியுறவு அமைச்சர்களுடன் சந்தித்தேன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இருதரப்பு உறவுகளில் அண்மையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அதிபர் ஷியிடம் விளக்கினேன். இந்த விவகாரத்தில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்’ என்றார்.

கடந்த ஜூன் 2020-ல் லடாக் யூனியன் பிரதேசத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பு ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, முதல்முறையாக இரு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.

மோதலுக்குக் காரணமான டெம்சோக் மற்றும் டெப்சாங்கை பகுதிகளை முன்வைத்து, பதற்றத்தை தணிக்கும் வகையில் அக்டோபர் 2024-ல் ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன்பிறகு, இருதரப்பு பேச்சுவார்த்தை வழிமுறைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன.

நேற்று (ஜூலை 15) சீன பிரதமர் வாங் யீ உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளின் எல்லைப் பகுதியான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) பதற்றத்தை குறைப்பதற்கான முயற்சிகளில் போதிய முன்னேற்றத்தை எட்டவேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in