நீதித் துறையில் நிர்வாகத் தலையீட்டை அனுமதிக்க முடியாது: பாகிஸ்தான் தலைமை நீதிபதி

தித் துறை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்புகள் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
பாகிஸ்தான் தலைமை நீதிபதி காஸி பயேஸ் இஸா
பாகிஸ்தான் தலைமை நீதிபதி காஸி பயேஸ் இஸா

நீதித் துறையில் நிர்வாகம் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் தலைமை நீதிபதி காஸி பயேஸ் இஸா கண்டிப்புடன் கூறினார்.

நீதித் துறை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்புகள் தலையிடுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தலைமை நீதிபதி இதைத் தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் நீதித் துறை தனது செயல்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாது என்றும் தலைமை நீதிபதி காஸி பயேஸ் இஸா உறுதிபட தெரிவித்ததாக “தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்” செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப்பை பாகிஸ்தான் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் சந்தித்தார். அப்போது சட்டத் துறை அமைச்சர் அஸாம் நஸீர் தரார் மற்றும் அட்டார்னி ஜெனரல் மன்சூர் உஸ்மான் அவான் ஆகியோரும் உடன் இருந்தனர். பிரதமரை சந்தித்த நிலையில் தலைமை நீதிபதி இதைத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் சமீபத்தில் நீதித் துறை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்புகள் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். நீதித் துறை நடவடிக்கைகளில் நிர்வாகத்தினர் தலையிடுவது ஆபத்தானது என்றும் அதில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமை நீதிபதி காஸி பயேஸ் இஸா, உயர்நிலை நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்தார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் சட்டத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார்.

ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த சந்திப்பின்போது தலைமை நீதிபதி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் நீதித் துறையில் நிர்வாகத்துறையின் குறுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கண்டிப்புடன் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

நீதித் துறையில் நடவடிக்கைகளில் நிர்வாகம் தலையிடுவது குறித்த புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையைக் கூட்டி விவாதி முடிவெடுப்பதாக பிரதமர் ஷெரீப் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in