வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்ரஃபே மொர்டஸாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடித்ததையடுத்து வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து சலிமுல்லா கான் தலைமையில் புதிய இடைக்கால அரசு அமைந்தது.
வங்கதேசத்தில் தொடர்ந்து நிலவி வரும் அசாதாரண சூழலில், வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்ரஃபே மொர்டஸாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற மொர்டஸா அவாமி லீக் கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்தார்.