துபாயில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தால் மூழ்கிய சாலைகள்!

1949-க்குப் பிறகு பதிவான தரவுகளின்படி, துபாயில் பெய்யும் அதிகபட்ச மழைப்பொழிவு இது.
துபாயில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தால் மூழ்கிய சாலைகள்!
படம்: https://twitter.com/abdullahayofel

துபாயில் ஏப்ரல் 16-ல் வரலாறு காணாத பெய்த கனமழையால் சாலை முழுக்க வெள்ள நீர் சூழந்துள்ளன.

வெள்ளப் பெருக்காமல் சாலைப் போக்குவரத்து, விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 16-ல் 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் 254 மில்லிமீட்டர் அளவில மழை பெய்துள்ளது. 1949-க்குப் பிறகு பதிவான தரவுகளின்படி, துபாயில் பெய்யும் அதிகபட்ச மழைப்பொழிவு இது.

மழை வெள்ளத்தால் சாலைகள் சூழ்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ஏராளமான கார்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. துபாய் மெட்ரோ ரயில் நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன.

விமான நிலையங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. இந்தியாவிலிருந்து நேற்று துபாய் சென்ற 15 விமானங்கள் உள்பட 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

178 விமானங்கள் தாமதமாக துபாய் சென்றடைந்தன. 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. துபாயிலிருந்து புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பை ஏற்பட்டது. இந்தியாவுக்குப் புறப்பட்ட 13 விமானங்கள் உள்பட 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 152 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

விமானங்கள் தொடர்ந்து தாமதமாக வந்து சேர்வதாலும், மாற்றிவிடப்படுவதாலும், சமீபத்திய தகவல்களுக்கு உரிய விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு துபாய் விமான நிலையங்கள் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in