என்னை அதிபராகத் தேர்வு செய்யாவிட்டால் ரத்த ஆறு ஓடும்: டொனால்ட் டிரம்ப்

"மெக்சிகோவில் கார்களை தயாரித்து அதனை அமெரிக்காவில் விற்க சீனா திட்டமிட்டுள்ளது."
டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப் ANI

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தன்னை அதிபராகத் தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் கலந்துக் கொண்டார்.

இதில் டிரம்ப் பேசியதாவது:

“நினைவில் கொள்ளுங்கள், அதிபர் தேர்தல் நடைபெறும் நாள் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். ஜோ பைடன் ஒரு மோசமான அதிபர்.

மெக்சிகோவில் கார்களை தயாரித்து அதனை அமெரிக்காவில் விற்க சீனா திட்டமிட்டுள்ளது. நான் அதிபராகப் பொறுப்புக்கு வந்தால், அவர்களால் ஒரு வாகனத்தைக் கூட அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்ய முடியாது.

என்னை அதிபராகத் தேர்வு செய்யாவிட்டால், நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார் அவர்.

எனினும் கார் தொழில் துறை குறித்துப் பேசும்போது டிரம்ப் இவ்வாறு கூறியதால், ரத்து ஆறு ஓடும் என்பதை எதைக் குறிப்பிட்டுச் சொன்னார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in