உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இஸ்ரேலுக்கு 5-வது இடம்!

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இஸ்ரேலுக்கு 5-வது இடம்!

ஹமாஸுடன் ஐந்து மாதங்கள் போரில் ஈடுபட்ட போதிலும், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 5-வது இடத்தைப் பிடித்துள்ளதாக 2024 உலக மகிழ்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை மதிப்பீடு, நேர்மறைச் சிந்தனை மற்றும் எதிர்மறைச் சி்ந்தனை வெளிப்பாட்டின் அடிப்படையில் 143 நாடுகளின் மகிழ்ச்சிப் பட்டியல் அறிக்கை தரவரிசைப்படுத்தப்பட்டது.

இஸ்ரேல் ரமத் கானில் உள்ள பார்-இலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அனத் பான்டி மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஆய்வு நடத்தினார்.

சர்வதேச மகிழ்ச்சிக் குறியீட்டில் முதல் ஐந்து இடங்களில் இஸ்ரேல் உள்ளது. பொருளாதார வலிமை, சமூக ஈடுபாட்டின் அளவு மற்றும் நாட்டின் சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைக் கொண்டு மகிழ்ச்சியின் தரம் அளவிடப்படுகிறது.

இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் முறையே 2-வது, 3-வது மற்றும் 4-வது இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த லெபனானை முன்னுக்குத் தள்ளி அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்துவிட்டது.

"அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியின் நிலை குறித்து மிகவும் துல்லியமாகப் படம்பிடித்து அறிக்கை வழங்குவதற்காக தரவரிசையை ஆய்வாளர்கள் கணக்கிடும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி வாழ்க்கைத் திருப்தி நி்லையைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே, மகிழ்ச்சி அறிக்கையில் இஸ்ரேலின் 5-வது தரவரிசை கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேல் மக்களின் வாழ்க்கையில் நிலவும் நீடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது என்று பான்டி விளக்கி்யுள்ளார்.

"உதாரணமாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட, உலகளாவிய மகிழ்ச்சித் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட அதே நாடுகள் தான் இடம்பிடிக்கின்றன” என்றார்.

அமெரிக்கச் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கேலப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான சர்வதேச நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in