அதிக வேலைநேரம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு என்ன இடம்?

இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களை ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க நாடுகள் பிடித்துள்ளன
அதிக வேலைநேரம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு என்ன இடம்?
1 min read

உலகளவில் அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. இதில் அதிக வேலைநேரத்தைக் கொண்ட முதல் பத்து நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது இந்தியா.

ஐநா சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில், ஒரு வாரத்தில் 54.4 மணி நேரத்தை சராசரி வேலை நேரமாகக் கொண்டுள்ள பூடான் முதலிடத்தில் உள்ளது. பூடானின் மக்கள் தொகை 7 லட்சமாக இருக்கும் நிலையில், அங்குள்ள சராசரி வேலை நேரம் உலகிலேயே அதிகமாக உள்ளது.

பூடானைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், காங்கோ, கத்தார், மௌரிட்டானா, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள் அதிக வேலை நேரம் கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் உள்ளன. இவை அனைத்துமே ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளாகும்.

இந்த அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில் 46.7 மணி நேரத்தை சராசரி வேலை நேரமாகக் கொண்டுள்ளது இந்தியா. மேலும் பணி நேரத்தை தாண்டி அதிக நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது இந்தியா.

இந்தியாவைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் 9-வது மற்றும் 10-வது இடத்தில் வங்கதேசமும், பாகிஸ்தானும் உள்ளன. அதே நேரம் சீனா, ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர், குரோஷியா, அருபா உள்ளிட்ட நாடுகளின் சராசரி வேலை நேரம் குறைந்த அளவில் ஒரு வாரத்துக்கு 34.2-ல் இருந்து 46.1 மணி நேரமாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in