கணவனின் குறுஞ்செய்திகளைப் பார்த்த மனைவி: ‘ஆப்பிள்’ மீது வழக்குத் தொடுத்த தொழிலதிபர்

மெசேஜ் சிங்கிங் (Message syncing) அம்சம் மூலமாக ஐபோனும், மனைவியிடம் இருந்து ஐமேக்கும் இணைந்துள்ளது.
‘ஆப்பிள்’ மீது வழக்குத் தொடுத்த தொழிலதிபர்
‘ஆப்பிள்’ மீது வழக்குத் தொடுத்த தொழிலதிபர்ANI
1 min read

கணவரால் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மனைவி படித்த காரணத்தால், தொழிலதிபர் ஒருவர் ‘ஆப்பிள்’ நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது ஐபோன் மூலம் பாலியல் தொழிலாளிக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளை நிரந்தரமாக நீக்கும் அம்சத்தால் நீக்கியுள்ளார்.

இருப்பினும் மெசேஜ் சிங்கிங் (Message syncing) அம்சம் மூலமாக அவரது ஐபோனும், தனது மனைவியிடம் இருந்து ஐமேக்கும் இணைந்துள்ளது. இதனால் கணவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை மனைவி படித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் இந்தத் தொழில்நுட்பம் அம்சம் குறித்து தனக்குத் தெரியப்படுத்தவில்லை என ஆப்பிள் நிறுவனம் மீது தொழிலதிபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரு கருவிகள் இணைந்திருக்கும் போது ஒரு கருவியில் குறுஞ்செய்திகளை நீக்கினால் அது மற்றொரு கருவியில் தானாக நீக்கப்படாது என்பதே ஆப்பிளின் தொழில்நுட்ப அம்சமாக உள்ளது. எனவே தனது ஐபோனில் அனுப்பிய குறுஞ்செய்திகளை நிரந்தரமாக அவர் நீக்கினாலும், அது ஐமேக்கில் நீக்கப்படவில்லை. எனவே இந்தக் காரணத்தால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து, இந்திய மதிப்பில் ரூ. 53 கோடி இழப்பீடும் கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in