தாய்லாந்து கம்போடியா திடீர் மோதல்: பின்னணி என்ன? | Thailand | Combodia

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றியுள்ளன.
பிரசாட் தா முயென் தோம் கோயில்
பிரசாட் தா முயென் தோம் கோயில்https://commons.wikimedia.org/wiki/User:Ddalbiez
1 min read

அடர்ந்த, மலைப்பாங்கான டாங்ரெக் எல்லைப் பகுதியில் கம்போடியவை சேர்ந்த ஆளில்லா விமானத்தை (டிரோன்) கண்டதாக நேற்று (ஜூலை 23) தாய்லாந்து ராணுவப் படைகள் கூறியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையில் பதற்றங்கள் அதிகரித்தன.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு இடையே துப்பாக்கிச் சூடு, ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் எஃப்-16 போர் விமானங்கள் வழியாக வான்வழித் தாக்குதல்கள் ஆகியவை நடந்தேறின.

தென்கிழக்கு ஆசியாவின் இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான இந்த மோதலுக்குக் காரணமாக பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்களால் விட்டுச் செல்லப்பட்ட ஒரு எல்லைப் பிரச்னையும், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய ஹிந்து கோயில் வளாகமும் உள்ளது.

தென் கிழக்கு ஆசியப் பகுதியை ஆட்சிசெய்த கெமர் ராஜ்ஜியத்தின் மன்னர் இரண்டாம் உதயாதித்யவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த வளாகத்தில் உள்ள `பிரசாட் தா முயென் தோம்’ ஹிந்து கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

டாங்ரெக் மலைப்பகுதியில் இருக்கும் கணவாய் பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில் வளாகம், முன்பு கம்போடியாவின் அங்கோரை தாய்லாந்தின் ஃபிமாயுடன் இணைக்கும் ஒரு பழங்கால கெமர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

கெமர் பேரரசின் எல்லைகளின் அடிப்படையில் இந்த கோயிலுக்குக் கம்போடியா உரிமை கோரும் அதேநேரத்தில், அந்தப் பகுதி தங்கள் நாட்டு எல்லைக்குள் இருப்பதாக தாய்லாந்து தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.

டிரோன் பிரச்னையைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற்றியுள்ள நிலையில், எல்லையோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in