பைடன் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: வெள்ளை மாளிகை

2012-ல் நடந்த துணை அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் பால் ரயானை வாதத்திறமையால் திணறடித்த பைடன் இந்த முறை டிரம்பின் வாதத்திறமைக்கு பணிந்து போனார்
பைடன் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: வெள்ளை மாளிகை
ANI

அட்லாண்டா விவாதங்களை முன்வைத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என்று ஊகங்கள் கிளம்பிய நிலையில், பைடன் ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜீன் பெர்ரி.  

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்க அதிபரைத் தேர்தெடுக்க தேர்தல் நடைபெரும். தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31 உடன் முடிவடைகிறது, எனவே புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் பைடனும் (81), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் (79) போட்டியிடுகின்றனர்.

வழக்கமாக நவம்பர் மாதம் நடக்கும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு செப்டெம்பர் மாதம் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடக்கும். ஆனால் சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனம் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் இந்த இருவரையும் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை அட்லாண்டாவில் விவாதம் நடத்தியது.

டிரம்ப் உடனான இந்த விவாதத்தில் பைடன் அதிகம் தடுமாறினார். வயது மூப்பின் காரணமாக டிரம்பின் வார்த்தைத் தாக்குதல்களுக்கு அவரால் சரியான எதிர்த் தாக்குதலை அளிக்க முடியவில்லை.

2012-ல் நடந்த அமெரிக்க துணை அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் பால் ரயானை தன் வாதத்திறமையால் திணறடித்த பைடன் இந்த முறை டிரம்பின் வாதத்திறமைக்கு பணிந்து போனார் என்றே கூற வேண்டும். இதை அடுத்து அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் எழுப்பப்பட்டன.

அமெரிக்க மக்கள் மத்திலும் டிரம்புக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் பைடன் தவிர்த்து, டிரம்பை எதிர்க்கும் அளவுக்கு சரியான ஆட்கள் ஜனநாயக கட்சியில் இல்லை. ஒரு வேளை வேறு வழியில்லாமல் மாற்று வேட்பாளர்களைத் தேடினாலும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் உள்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இந்த இருவரில் ஹிலாரி கிளிண்டனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. அதிலும் 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரியை ஏற்கனவே தோற்கடித்துள்ளார் டிரம்ப். எனவே ஹிலாரியை மீண்டும் களமிறக்கி கையை சுட்டுக் கொள்ளாது ஜனநாயக கட்சி. பைடன் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தால் கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆனால் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜீன் பெர்ரி அளித்த பேட்டியை வைத்துப் பார்க்கும்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பைடன் இருப்பார் என்று தெரிகிறது. பைடனுக்கு இருக்கும் ஒரே கடைசி வாய்ப்பு செப்டம்பர் மாதம் நடக்கும் விவாதம் மட்டுமே.

பைடன் தேர்தலில் தோல்வியடைந்து டிரம்புக்கு வழிவிடுவாரா அல்லது விவாத மேடையிலேயே தன் தோல்வியை ஒப்புக்கொள்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in