ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் உயிரிழப்பு

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் குற்றவாளியை சுட்டுக்கொன்றதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் உயிரிழப்பு
1 min read

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதில் காயமடைந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட மேலும் 8 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

உள்ளூர் நேரப்படி சுமார் மாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்து துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் மற்றொரு கட்டடத்துக்கு செல்ல முயன்றோம். அப்போது அந்தப் புறத்திலிருந்து சில வந்துகொண்டிருந்தார்கள். மூன்று முறை குண்டுகள் சப்தம் கேட்டது. உடனடியாக அனைவரும் கூச்சலிடத் தொடங்கினார்கள்" என்றார்.

உடனடியாக, காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குற்றவாளியை சுட்டுக்கொன்றதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in