அநுர குமார திசாநாயக்க
அநுர குமார திசாநாயக்க@anuradisanayake

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசாநாயக்க!

தேர்தலில் பதிவான வாக்குகளில் 55.89 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
Published on

ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க, இலங்கை அதிபராக பதவியேற்றார்.

கடந்த செப். 21 அன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த ஜனதா விமுக்தி பெரமுனா கட்சித் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தேர்தலில் பதிவான வாக்குகளில் 55.89 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று அநுர குமார திசாநாயக்க, இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார்.

கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா அநுர குமார திசாநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in