ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மருத்துவ கல்வி மறுப்பு: ரஷித் கான் அதிருப்தி

“இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்”.
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மருத்துவ கல்வி மறுப்பு: ரஷித் கான் அதிருப்தி
ANI
1 min read

ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்பட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷித் கான் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, அங்குள்ள பெண்கள் நர்சிங் உள்பட மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்.

ரஷித் கானின் எக்ஸ் பதிவு

“இஸ்லாமிய போதனைகளில் கல்விக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. இது ஆண்களும் பெண்களும் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள வலியுறுத்துகிறது. கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சமீபத்தில் மூடப்பட்டது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

கல்வியின் மூலம் பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது என்பது சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, தார்மீகக் கடமையும் கூட. எனவே, இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in