98-வது ஆஸ்கர் விருது: 6 விருதுகள் வென்ற ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ | Oscars 26 | One Battle After Another |

சிறந்த சர்வதேச படத்திற்கான விருது நார்வே நாட்டின் செண்டிமெண்டல் வேல்யூ (Sentimental Value) படம் வென்றது...
98-வது ஆஸ்கர் விருது: 6 விருதுகள் வென்ற ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’
ஆஸ்கர் விருது@TheAcademy
2 min read

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அவதார் 3 சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

திரைத்துறையில் உயரிய விருதாகக் ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இந்திய நேரப்படி மார்ச் 16 அன்று நடைபெற்றது. இதில், 2025-ல் வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆறு ஆஸ்கர் விருதுகள்

சிறந்த படத்திற்காக ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another) படம் ஆஸ்கர் விருது பெற்றது.

அப்படத்தின் இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் (Paul Thomas Anderson) சிறந்த இயக்குநர், தழுவப்பட்ட திரைக்கதை ஆகிய பிரிவுகளுக்கான விருதுகளைப் பெற்றார்.

அதேபோல் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகர் தேர்வு ஆகிய பிரிவுகளுக்கான விருதும் இப்படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை, இப்படத்தில் நடித்ததற்காக ஷான் பென் (Sean Benn) பெற்றார். இதன்மூலம் இப்படம் 6 ஆஸ்கர்களை வென்ற படமாக உள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை சின்னர்ஸ் (Sinners) படத்திற்காக மைக்கேல் பி ஜோர்டன் (Michael B. Jordan) வென்றார்.

இதே படம் சிறந்த ஒரினிஜல் திரைக்கதை பிரிவிலும், சிறந்த ஒரிஜினல் இசை பிரிவிலும், சிறந்த ஒளிப்பதிவு பிரிவிலும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இதேபோல் பிரான்கென்ஸ்டைன் (Frankenstein) படமும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த உடை அலங்காரம், சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

சிறந்த நடிகை, துணை நடிகை...

ஹாம்நெட் (Hamnet) படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜெஸ்ஸி பக்லி (Jessie Buckley) வென்றார்.

சிறந்த துணை நடிகைக்காக விருதை வெப்பன்ஸ் (Weapons) படத்திற்காக ஏமி மேடிகன் (Amy Madigan) வென்றார்.

கேபாப் டீமன் ஹன்டர்ஸ் (KPop Demon Hunters) படம் சிறந்த முழு நீள அனிமேஷன் படம் மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது த கேர்ள் ஹூ கிரைடு பேர்ல்ஸ் (The Girl Who Cried Pearls) படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த விஷுஅல் எஃபெக்ட்ஸுக்கான விருது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3 - பயர் அண்டு ஆஷ் படம் வென்றது.

சிறந்த ஒலி அமைப்புக்கான விருது

சிறந்த சர்வதேச படத்திற்கான விருது நார்வே நாட்டின் செண்டிமெண்டல் வேல்யூ (Sentimental Value) படம் வென்றது.

சிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான விருதை மிஸ்டர் நோபடி அகைன்ஸ்ட் புதின் (Mr. Nobody Against Putin) படமும்,

ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஆல் த எம்டி ரூம்ஸ் (All the Empty Rooms) படமும் வென்றன.

சிறந்த ஒலி அமைப்புக்காக எஃப் 1 (F1) படம் ஆஸ்கர் வென்றது.

Summary

98th Oscar Awards ceremony held in Los Angeles, USA, on March 16, Indian time. In this, awards have been announced for films released in 2025.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in