5-வது முறையாகத் திருமணம் செய்த 93 வயது ரூபர்ட் முர்டோக்

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 93 வயதான பிரபல ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் தன் 67 வயது காதலி எலெனா ஜோகோவாவை திருமணம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
5-வது முறையாகத் திருமணம் செய்த 93 வயது ரூபர்ட் முர்டோக்

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தன் காதலி எலெனா ஜோகோவாவை நேற்று திருமணம் செய்துகொண்டார் அமெரிக்காவின் பிரபல ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக்.

ஆஸ்திரேலியா நாட்டில் 1931-ல் பிறந்த ரூபர்ட் முர்டோக் தன் தந்தையின் மரணத்துக்குப் பிறகு அவர் நடத்தி வந்த ‘தி நியூஸ்’ எனும் செய்தித்தாளை 1952 முதல் ஏற்று நடத்த ஆரம்பித்தார். தன் உழைப்பால் அடுத்த 20 வருடங்களில் ஆஸ்திரேலியா நாட்டு செய்தித்தாள் துறையின் முன்னோடிகளில் ஒருவரானார்.

பிறகு 1974-ல் அமெரிக்க நாட்டுக்குக் குடிபெயர்ந்த முர்டோக் அங்கிருந்த புகழ்பெற்ற பத்திரிக்கைகள் நிறுவனங்களான வால் ஸ்டிரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றை வாங்கி அதன் உரிமையாளரானார். இன்று உலகின் பல நாடுகளில் ஊடக நிறுவனங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள், புத்தகப் பதிப்பு நிறுவனங்கள் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

1956-ல் முதல் திருமணம் செய்து கொண்ட முர்டோக் 1967, 1999, 2016 ஆகிய வருடங்களில் அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் தன் மனைவியை விவாகரத்து செய்த பிறகே புதிய திருமணம் செய்து கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் எலெனா ஜோகோவாவுக்கும், ரூபர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவ்விருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in