அரிய நிகழ்வாக வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றும் 6 கோள்கள்: எப்போது பார்க்கலாம்?

சென்னை கோட்டூர்புரம் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் கோவை, திருச்சி, வேலூரில் உள்ள மண்டல அறிவியல் தொழில்நுட்ப மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரிய நிகழ்வாக வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றும் 6 கோள்கள்: எப்போது பார்க்கலாம்?
PRINT-244
1 min read

அரிய நிகழ்வாக வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றும் 6 கோள்களை இன்று (ஜன.22) தொடங்கி வரும் ஜன.25 வரை காணலாம்.

பல்வெளி மண்டலத்தில் உள்ள சூரிய குடும்பத்தில் புதன் (mercury), வெள்ளி (venus), பூமி (earth), செவ்வாய் (mars), வியாழன் (jupiter), சனி (saturn), யுரேனஸ் (uranus), நெப்டியூன் (neptune) என மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. சூரியனைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுவட்டப் பாதையில் பயணிக்கும் இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறும்.

இந்நிலையில், இன்று (ஜன.22) தொடங்கி வரும் ஜன.25 வரை வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. இந்த அரிய நிகழ்வை தமிழ்நாட்டில் இருந்து குறிப்பிட்ட நாட்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை காண முடியும்.

குறிப்பாக, வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களை வெறும் கண்களால் வெட்டவெளியில் இருந்து காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும்.

இதனால், சென்னை கோட்டூர்புரம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கம் மற்றும் கோவை, திருச்சி, திருநெல்வேலியில் உள்ள மண்டல அறிவியல் தொழில்நுட்ப மையங்களில் தொலைநோக்கி மூலம் கோள்களைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதைக் காணலாம் என்று அறிவியல் தொழில்நுட்ப மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த 2022-ல் 5 கோள்கள் இதுபோல ஒரே நேர்கோட்டில் சந்தித்தன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in