ககன்யான் திட்டத்திற்கு உபயோகப்படும் ஸ்பேடெக்ஸ்: எப்போது விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ?

வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் பயணித்தாலும், விண்வெளியின் ஒன்றிணைந்து செயலாற்றும் இந்த செயற்கைக்கொள்கள் மூலம் பல்வேறு தரவுகளை சேகரிக்கவுள்ளது இஸ்ரோ.
ககன்யான் திட்டத்திற்கு உபயோகப்படும் ஸ்பேடெக்ஸ்: எப்போது விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ?
1 min read

சந்திரயான் 4, இந்திய விண்வெளி நிலையம், ககன்யான் போன்ற இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு உதவிடும் வகையில் ஸ்பேடெக்ஸ் பரிசோதனை செயற்கைக்கோள்களை வரும் டிச. 26-ல் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ.

ஆனந்த் டெக்னாலஜிஸ் என்கிற தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருங்கிணைத்த தலா 400 கிலோ எடை கொண்ட 2 செயற்கைக் கோள்களை சமீபத்தில் இஸ்ரோவின் பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திடம் வழங்கியது. சோதனை முறையில் இந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உபயோகிக்கப்படவுள்ளன.

வரும் டிச.26-ல் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன் இந்த 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் இந்த இரு செயற்கைக் கோள்களும் ஒன்றாக இணைந்து நிலவைச் சுற்றி வரும் வகையில் செயல்படுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் தனித்தனியாகப் பயணித்தாலும், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு ஒன்றாக இணைந்து செயலாற்றும் இந்த செயற்கைக்கொள்கள் மூலம் பல்வேறு தரவுகளை சேகரிக்கவுள்ளது இஸ்ரோ.

ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களால் விண்வெளியில் சேகரிக்கப்படும் இந்தத் தரவுகள் அனைத்தும், வருங்காலத்தில் இஸ்ரோவால் செயல்படுத்தப்படவுள்ள சந்திரயான் 4, இந்திய விண்வெளி நிலையம் (அந்தரிக்‌ஷா), ககன்யான் போன்ற திட்டங்களுக்காக உபயோகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, இஸ்ரோவின் தேவைக்காக சோதனை முயற்சியில் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in