
இந்தியாவில் கடந்த நவம்பரில் 71 லட்சம் கணக்குகளை நீக்கியுள்ளதாக வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான வாட்சப் நிறுவனம், இந்தியாவில் 50 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நிறுவன விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காகக் கடந்த நவம்பரில் இந்தியாவில் 71.96 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனம் தகவல் வெளியிடுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த அக்டோபரில் 71 லட்சம் கணக்குகளும் செப்டம்பரில் 75 லட்சம் கணக்குகளும் ஆகஸ்டில் 74 கணக்குகளும் வாட்சப் நிறுவனத்தால் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு விடாது தொல்லை, மோசடி, பயனாளர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது போன்ற காரணங்களை முன்வைத்து வாட்சப் கணக்குகள் முடக்கப்படுகின்றன.