இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் இன்று திறப்பு! | TESLA | Mumbai

உலகளவில் ஒப்பிடும்போது டெஸ்லா கார்களின் விலை இந்திய சந்தையில்தான் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் இன்று திறப்பு! | TESLA | Mumbai
https://x.com/Tesla_India
1 min read

மும்பையின் பாந்த்ரா குர்லா வளாக சாலையில் அமைந்துள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில் இந்தியாவின் முதல் ஷோரூமை டெஸ்லா இன்று (ஜூலை 15) திறந்துள்ளது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் அனுபவ மையமாக இந்த ஷோரூம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் வாகனங்களை நெருக்கமாகப் பார்க்கவும், டெஸ்லாவின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளவும் இந்த ஷோரூமில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் வகையில் ஆறு டெஸ்லா கார்கள் இந்த ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஷோரூமில் வைத்து டெஸ்லாவின் `ஒய்’ மாடல் எஸ்.யூ.வி. கார் இன்று (ஜூலை 15) அறிமுகப்படுத்தப்பட்டது. ரொக்கமாக பணத்தை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்காக இதன் விலை ரூ. 60 லட்சம் (70 ஆயிரம் அமெரிக்க டாலர்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் இயங்கும் `ஒய்’ மாடலின் மற்றொரு ரக காரின் மதிப்பு ரூ. 68 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஒப்பிடும்போது டெஸ்லா கார்களின் விலை இந்திய சந்தையில்தான் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், `ஒய்’ மாடல் எஸ்.யூ.வி. காரின் விலை 45 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆக உள்ளது. அதே நேரம் சீனாவில் இதன் விலை 2,63,500 யுவான் (ரூ. 31 லட்சம்) ஆகவும், ஜெர்மனியில் 45,970 யூரோக்கள் (ரூ. 46 லட்சம்) ஆகவும் உள்ளது.

மத்திய அரசால் விதிக்கப்படும் அதிக விகிதத்திலான இறக்குமதி வரி இத்தகைய அதிகப்படியான விலைக்கான காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த `ஒய்’ மாடல் டெஸ்டா கார் சீனாவின் சாங்காயில் முழுமையாக கட்டமைக்கப்பட்டு அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ நுழைவு, அமெரிக்க அதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான இந்நிறுவனத்தின் முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உள்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத்திற்கான தேவையை இலக்காக வைத்து டெஸ்லா களமிறங்கியுள்ளது.

புதிய ஷோரூம் தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், `இது வெறுமனே ஒரு அனுபவ மையத்தின் திறப்பு விழா மட்டுமல்ல, நகரத்திற்கும் சரியான மாநிலத்திற்கும், அதாவது மஹாராஷ்டிரா மாநிலத்திற்கும் மும்பை நகரத்திற்கு டெஸ்லா சரியாக வந்து சேர்ந்துள்ளது என்பதற்கான ஒரு அறிவிப்புமாகும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in