
யூடியூபில் 40 கோடி சப்ஸ்க்ரைபர்களை பெற்ற முதல் யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் ஜிம்மி டொனால்ட்சன், யூடியூப் தலைமைச் செயல் அலுவலரிடம் பிளே பட்டனை பெற்றுள்ளார்.
மிஸ்டர் பீஸ்ட் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் ஜிம்மி டொனால்ட்சன். அமெரிக்காவைச் சேர்ந்தவரான இவர் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சாகச அனுபவங்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். உலகளவில் புகழ்பெற்ற இவர், தனது காணொளியை தமிழ் உள்பட வெவ்வேறு மொழிகளிலும் வெளியிடுவது உண்டு. மிஸ்டர் பீஸ்ட் பிரதான சேனல் உள்பட பல்வேறு யூடியூப் சேனல்களை இவர் நடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 1 அன்று 40 கோடி சப்ஸ்க்ரைபர்கள் எனும் புதிய மைல்கல்லை இவருடைய பிரதான யூடியூப் சேனல் அடைந்தது. உலகிலேயே இந்த மைல்கல்லை எட்டிய முதல் யூடியூப் சேனலும் மிஸ்டர் பீஸ்ட் தான்.
இந்த மைல்கல்லை எட்டியதைக் கௌரவிக்கும் விதமாக மிஸ்டர் பீஸ்டுக்கு யூடியூப் தலைமைச் செயல் அலுவலர் நீல் மோகன் பிரத்யேக பிளே பட்டனை அளித்துள்ளார். இதை மிஸ்டர் பீஸ்ட் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Youtube | Youtuber | MrBeast | 400 Million Subscribers | 40 Crores Subscribers | Youtube CEO | Youtube play button