ஐரோப்பிய யூனியனின் விண்கலத்தை ஏவும் இஸ்ரோ!

2035-க்குள் விண்வெளி மையத்தை அமைக்கவும், 2040-க்குள் முதல் இந்திய வீரரை நிலவில் தரையிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் விண்கலத்தை ஏவும் இஸ்ரோ!
https://www.isro.gov.in/
1 min read

சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்யவிருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில், இந்திய விண்வெளி கருத்தரங்கம் 3.0 கடந்த நவ.5-ல் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வருங்காலப் பணிகள் குறித்துப் பேட்டியளித்தார் மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங். அவர் பேசியவை பின்வருமாறு,

`சூரியனின் ஒளிவட்டம் (Halo) குறித்த ஆராய்ச்சியில் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி-எக்ஸ்.எல் ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்வெளிக்கு அனுப்புகிறது இஸ்ரோ.

இந்த புரோபா-3 விண்கலத்தில் உள்ள இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றாக இணைந்து செயல்படும். இதன்மூலம் சூரியனின் ஒளி வட்டப்பகுதி விரிவாக ஆய்வு செய்யப்படும். 2023 புதிய விண்வெளி கொள்கை மூலம் தனியாருக்கு விண்வெளித்துறை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும்.

2035-க்குள் விண்வெளி மையத்தை அமைக்கவும், 2040-க்குள் முதல் இந்திய வீரரை நிலவில் தரையிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 2 சதவீதமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் இது 10 சதவீதமாக உயரும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in