இந்தியாவின் 101-வது ராக்கெட்: நோக்கத்தை விவரித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்!

எந்த நாடுகளுடனும் நாம் போட்டியில் ஈடுபடுவதில்லை; நமது மக்களுக்கு எது தேவையோ அதன்படியே நாங்கள் செயல்படுகிறோம்.
இந்தியாவின் 101-வது ராக்கெட்: நோக்கத்தை விவரித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்!
ANI
1 min read

பூமியின் மேற்பரப்பை ஆராய்ந்து, அதை கண்காணிக்கும் வகையிலான அம்சங்கள் கொண்ட ரிசாட் 1-பி செயற்கைக் கோளை, 101-வது ராக்கெட் மூலம் இந்தியா விண்ணில் ஏவ இருப்பதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவுக்குச் சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து வரும் மே 18 அன்று பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் ரிசார்ட் 1-பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

`18-ம் தேதி 101-வது முறையாக ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறோம். 1979-ல் முதல்முறையாக எஸ்.எல்.வி-3 ராக்கெட்டை ஏவினோம்; அதன் வெற்றி சதவீதம் 98 ஆக இருந்தது. 1980-ல் வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் ஏவி, விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்தது.

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டில், பூமியின் மேற்பரப்பை ஆராய்ந்து, அதை கண்காணிக்கும் ரிசாட் 1-பி செயற்கைகோளை நாங்கள் அனுப்புகிறோம். நமது செயற்கைக்கோள்கள் அனைத்துமே துல்லியமாக இயங்குகின்றன. உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த தெளிவுத்திறனைக் கொண்டுள்ள கேமராவை நாம் நிலவில் வைத்திருக்கிறோம்.

எந்த நாடுகளுடனும் நாம் போட்டியில் ஈடுபடுவதில்லை; நமது மக்களுக்கு எது தேவையோ அதன்படியே நாங்கள் செயல்படுகிறோம். நம் மக்களின் பாதுகாப்பிற்கான செயற்கைக்கோள்களை நாங்கள் அனுப்புகிறோம். மங்கள்யான் திட்டத்தின் 2-ம் கட்ட விண்கலம் அடுத்த 2.5 ஆண்டுகளில் ஏவப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in