அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 2-வது பெரிய 5G கைப்பேசி சந்தையாக உருவெடுத்துள்ளது இந்தியா. உலகின் மிகப்பெரிய 5G கைப்பேசி சந்தை என்ற இடத்தை தக்கவைத்துள்ளது சீனா.
கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, நடப்பாண்டின் முதல் பாதியில் மட்டும் உலகளவில் 20 சதவீதம் அளவுக்கு 5G கைப்பேசிகளின் ஏற்றுமதி உயர்ந்திருக்கின்றன. அடக்கமான விலையில் அதிக வகையிலான 5G கைப்பேசிகள் கிடைப்பதால், வளரும் நாடுகளில் 5G கைப்பேசிகளுக்கான சந்தை அதிகரித்துள்ளது.
2024-ல் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 2-வது பெரிய 5G கைப்பேசி சந்தையாக உருவெடுத்துள்ளது இந்தியா. விவோ, சாம்சங், ஷியோமி உள்ளிட்ட அடக்க விலையிலான கைப்பேசிகள் இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளது ஆய்வு நிறுவனம். அதேநேரம் உலகின் மிகப்பெரிய 5G கைப்பேசி சந்தை என்ற இடத்தை தக்கவைத்துள்ளது உள்ளது சீனா
உலக அளவில் அதிக 5G கைப்பேசிகளை ஏற்றுமதி செய்து முதல் இடத்தில் உள்ளது ஆப்பிள் நிறுவனம். மொத்த 5G கைப்பேசிகள் ஏற்றுமதியில் 25 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14, 15 போன்ற கைப்பேசிகள் உலகளவிலான ஏற்றுமதியில் முன்னணி இடத்தில் உள்ளன.
மொத்த ஏற்றுமதியில் 21 சதவீதத்தை வைத்திருக்கும் சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் உலகின் மொத்த 5G கைப்பேசிக்கான தேவையில் 63 சதவீதம் ஆசியா-பசிஃபிக் பிரந்தியத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களை மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா ஆகியவை பிடித்துள்ளன.