மாதிரி படம்
மாதிரி படம்

10ஜி பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்திய சீனா

புதிய 10ஜி சேவை மூலம் 20 ஜிபி அளவு கொண்ட படத்தை 20 விநாடிகளுக்கும் குறைவாகவே பதிவிறக்கம் செய்யலாம்.
Published on

இந்தியாவில் 6ஜி பிராட்பேண்ட் சேவை தொழில்நுட்பமே இன்னும் அறிமுகமாகாத நிலையில், தொழில்நுட்பத்தில் வேங்கைப் பாய்ச்சலில் சென்றுகொண்டிருக்கும் சீனா, உலகிலேயே முதல் நாடாக 10ஜி பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாய் மற்றும் சீன அரசின் சீனா யுனிகாம் இணைந்து இதைச் சாத்தியப்படுத்தியுள்ளன. 10ஜி பிராட்பேண்ட் சேவை மூலம் பதிவிறக்கத்தின் வேகம் 9,834 Mbps ஆக இருக்கும். பதிவேற்றத்தின் வேகம் 1,008 Mbps ஆக இருக்கும். இதை இந்தியாவுடன் ஒப்பிட்டால் நம் வீடுகளில் பதிவிறக்கத்தின் வேகம் சராசரியாக 100 Mbps இருக்கும்.

சீனாவின் இந்தப் புதிய தொழில்நுட்பத்தால், 4கே தரத்தில் உள்ள ஒரு முழு நீளத் திரைப்படத்தை (20 ஜிபி) பதிவிறக்கம் செய்ய, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். இதுவே, புதிய 10ஜி சேவை மூலம் அதே படத்தை 20 விநாடிகளுக்கும் குறைவாகவே பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த 10ஜி பிராட்பேண்ட் இணைய சேவை 50ஜி பேசிவ் ஆப்டிகல் நெட்வொர்க் (Passive Optical Network - PON) தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.

சீனாவின் இந்தப் பாய்ச்சல் இணைய உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. உலகளாவிய பிராட்பேண்ட் தொழில்நுட்பத்தில் இது சீனாவை முன்னணி இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. சுகாதாரம், கல்வி, வேளாண் உள்ளிட்ட துறைகளில் பெரியளவிலான முன்னேற்றத்துக்கு 10ஜி பிராட்பேண்ட் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in