ஐபோன் 16 சீரிஸை அறிமுகம் செய்த ஆப்பிள்: சிறப்பம்சங்கள் என்ன?

ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் விலை குறைந்துள்ளன.
ஐபோன் 16 சீரிஸை அறிமுகம் செய்த ஆப்பிள்: சிறப்பம்சங்கள் என்ன?
2 min read

ஆப்பிள் நிறுவனம் க்ளோடைம் நிகழ்ச்சியில் ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் அப்டேட் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து மீண்டும் தொழில்நுட்ப உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது 16 ஐபோன் சீரிஸ் அறிமுகத்துக்காக தான்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் டிஸ்ப்ளே இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 16 ப்ரோவின் அளவு 6.3 இஞ்ச். ப்ரோ மேக்ஸ் அளவு 6.9 இஞ்ச். ஐபோன் பேட்டரிகளில் சிறந்த பேட்டரி ஆயுள் உடையதாக இருக்கும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

16 ப்ரோ ஏ18 ப்ரோ சிப்பால் இயங்குகிறது. இது முந்தைய ஐபோன்களை காட்டிலும் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மை கொண்டது. இந்த புதிய ஜிபியு முந்தைய தலைமுறையைக் காட்டிலும் 20 சதவீதம் வேகமாக இயங்கக்கூடியது.

ஐபோன் 16 ப்ரோ சீரிஸில் கேமராக்களின் தொழில்நுட்பம் பன்மடங்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. 2-ம் தலைமுறை குவாட் பிக்ஸெல் சென்சார் மற்றும் ஸூரோ ஷட்டர் லேக் அம்சங்களை அடக்கிய 48 மெகா பிக்ஸெல் பியூஷன் கேமராவை கொண்டுள்ளது. புதிய 48 மெகா பிக்ஸெல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 120 எம்எம் போகல் லெந்த் கொண்ட 5x டெலிபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 16 ப்ரோவில் முன்பக்க விடியோவில் 4K120 மூலம் படம்பிடிக்கலாம். இதில் ஸ்பேஷியல் ஆடியோ கேப்ச்சர் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. ஏர் பாட் மற்றும் ஆப்பிள் விஷன் ப்ரோ மூலம் பார்க்கும்போது அற்புதமான அனுபவம் கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும், ஒலி அமைப்பில் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. உதாரணத்துக்கு ஸ்டுடியோவில் பதிவு செய்வதைப்போல ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம். இதற்காக சிறப்பு அம்சம் உள்ளது.

  • ஐபோன் 16 (128 ஜிபி) - ரூ. 79,900

  • ஐபோன் 16 பிளஸ் (128 ஜிபி) - ரூ. 89,900

  • ஐபோன் 16 ப்ரோ (128 ஜிபி) - ரூ. 1,19,900

  • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி) - ரூ. 1,44,900

ஐபோன் 16 சீரிஸை வாங்க வரும் வெள்ளிக்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

ஐபோன் 16 சீரிஸ் அறிமுகம் ஆனதையடுத்து, ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐஃபோன் 13 ஆகிய ஐபோன்களின் உற்பத்தியை நிறுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது. அதேவேளையில் மற்ற ஐபோன்களின் விலையும் சுமார் ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளன.

ஐபோன் 15 (128 ஜிபி)

  • பழைய விலை - ரூ. 79,900

  • புதிய விலை - ரூ. 69,900

ஐபோன் 15 பிளஸ் (128 ஜிபி)

  • பழைய விலை - ரூ. 89,900

  • புதிய விலை - ரூ. 79,900

ஐபோன் 14 (128 ஜிபி)

  • பழைய விலை - ரூ. 69,900

  • புதிய விலை - ரூ. 59,900

ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி)

  • பழைய விலை - ரூ. 79,900

  • புதிய விலை - ரூ. 69,900

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in