
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐபோன் 17 சீரிஸ் வரும் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட் போன்களின் ஒன்றான ஆப்பிள் ஐபோன், ஆண்டுதோறும் புதிய அறிமுகங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புதுவரவாக ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ஐபோன் 17 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை வெளியான ஐபோன் வகைகளில் ஐபோன் 17 மிகவும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டதாக விளங்குகிறது.
ஐபோன் 17 சீரிஸில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என 4 புதிய மாடல்கள் வெளியாகியுள்ளன. காஸ்மிக் ஆரஞ்சு, டீப் ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களில் ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள.
விலையைப் பொறுத்தளவில், ஐபோன் 17 போனில் 256 ஜிபி - ரூ. 82,900, 512 ஜிபி - ரூ. 1,02,900-க்கும் விற்பனை ஆகவுள்ளது. ஐபோன் 17 ப்ரோவில் 256 ஜிபி - ரூ. 1,34,900, 512 ஜிபி - ரூ. 1,54,900 மற்றும் 1 டிபி - ரூ. 1,74,900-க்கும் விற்பனை ஆகவுள்ளது.
மெலிதான ஐபோன் ஏர் போன்களிலும் 256 ஜிபி - ரூ. 1,19,900, 512 ஜிபி ரூ. 1,39,900 மற்றும் 1 டிபி - ரூ. 1,59,900-க்கும் விற்பனை ஆகவுள்ளது. ஐபோன் ப்ரோ மேக் ரக போன்களில் 256 ஜிபி - ரூ. 1,49,000, 512 ஜிபி - ரூ. 1,69,900, 1 டிபி - ரூ. 1,89,900 மற்றும் 2 டிபி - ரூ. 2,29,900-க்கும் விற்பனை ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், அப்பிள் வாட்ச் எஸ்.ஈ 3, ஏர்பாட்ஸ் ப்ரோ 3 உள்ளிட்டவையும் வெளியாகியுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 25,900 எனக் கூறப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய அறிமுகங்கள் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு வரும் என்றும், செப்டம்பர் 13 முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Iphone | Iphone 17 | Apple | Iphone Air | Iphone 17 Pro | Iphone 17 Pro Max | Slimmest Iphone |