“ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்”: எடப்பாடி பழனிசாமி

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி@EPSTamilNadu
1 min read

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்நிலையில் பிரச்சாரத்திற்கு முன்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களது பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளைய கேட்டறிந்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில், இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகை ரூ.3000 வழங்க வேண்டும்.

வருடத்துக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வு, மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன், உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in