எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!

`மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், வரும் ஜூலை 7 தொடங்கி தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்ANI
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு `இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், ராணுவத் தளபதிகள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், நடிகர்கள், தொழிலதிபர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு, உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்கி வருகிறது.

அச்சுறுத்தல்களுக்கு ஏற்றபடி இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் எனப் பல்வேறு பிரிவுகளாக நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் ஜூலை 7 தொடங்கி, தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கி வந்த ஒய் பிளஸ் பாதுகாப்பை, இசட் பிளஸ் பாதுகாப்பாக மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். மேலும், அவர் பயணம் செய்யும் வாகனத்துடன் வழியேற்படுத்தி தரும் வாகனமும், பாதுகாப்பு வாகனமும் செல்லும். அத்துடன் அவரது வாகனத்தில் தானியங்கி துப்பாக்கி ஏந்திய 2 பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in